Tuesday, December 7

8 வயது சிறுவனின் அதிரடி நடனம்: மைக்கல் ஜக்சனை மிஞ்சுவானா?

8 வயது சிறுவனின் அதிரடி நடனம்: மைக்கல் ஜக்சனை மிஞ்சுவானா? (வீடியோ இணைப்பு)

Picture 8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.

தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம்
8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.

தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.

இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.

அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
இவன் சவா8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான்.

தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.

இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.


அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
ல்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது.

இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார்.

அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்

Saturday, December 4

தொடரை வென்றது இந்தியா *காம்பிர் மீண்டும் சதம்



வதோதரா: காம்பிர் மீண்டும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்தியா.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. "டாஸ்' ஜெயித்த இந்திய அணி கேப்டன் காம்பிர் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஸ்ரீசாந்த், ரெய்னாவுக்குப் பதில் ஜாகிர் கான் மற்றும் ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் ஜேமி ஹவ், சவுத்தி நீக்கப்பட்டு, பிரண்டன் மெக்கலம், பிராங்க்ளின் இடம் பெற்றனர்.
மெக்கலம் ஏமாற்றம்:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் தந்தனர். முதல் ஓவரை ஜாகிர் வீசினார். இவர் வீசிய ஆட்டத்தின் 2 வது பந்திலேயே, டக்-அவுட்டாகி வெளியேறினார் மெக்கலம். வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டிய கப்டில் (12), காம்பிரின் துல்லிய "த்ரோவில்' ரன் அவுட்டானர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரோஸ் டெய்லர் (4) சொதப்பினார். சற்று நேரம் தாக்குப் பிடித்த வில்லியம்சன் (21), ஸ்டைரிஸ் (22) ஓரளவு ரன்கள் சேர்த்து வெளியேறினார். மிடில் ஆர்டரில் கேப்டன் வெட்டோரி (3), ஹாப்கின்ஸ் (6) சோபிக்க வில்லை. நியூசிலாந்து அணி 106 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
பிராங்க்ளின் ஆறுதல்:
பின்னர் பிராங்க்ளின், மெக்கலம் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராங்க்ளின், ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முதல் அரை சதம் கடந்தார். இவருக்கு நாதன் மெக்கலம் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்க, நியூசிலாந்து அணி 200 ரன்களை கடந்தது. இந்த ஜோடி 8 வது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்த நிலையில், நாதன் மெக்கலம் அவுட்டானார். இவர் 43 ரன்கள் (4 பவுண்டரி) சேர்த்தார். பின்வரிசையில் மில்ஸ்15 ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 224 ரன்கள் சேர்த்தது. 72 ரன்களுடன் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பிராங்க்ளின் அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா தரப்பில் ஜாகிர், அஷ்வின், யூசுப் பதான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
காம்பிர் மிரட்டல்:
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு காம்பிர் அதிரடி துவக்கம் தந்தார். சேவக் இல்லாத குறையை நீக்கிய இவர், மெக்கே பந்து வீச்சில் "ஹாட்ரிக் பவுண்டரி' அடித்து அசத்தினார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த காம்பிர், 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். இவருடன் இணைந்த முரளி விஜய் வழக்கம் போல, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் (30) அவுட்டானார்.
மீண்டும் சதம்:
நியூசிலாந்துக்கு எதிரான 2 வது போட்டியில் (ஜெய்ப்பூர்) சதம் அடித்து அசத்திய காம்பிர், நேற்றும் சதம் கடந்தார். இது ஒரு நாள் அரங்கில் இவர் அடிக்கும் 9 வது சதமாக அமைந்தது. மறுமுனையில் இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த விராத் கோஹ்லி, ஒரு நாள் அரங்கில் 10 வது அரை சதம் கடந்தார். மெக்கே பந்து வீச்சில் ஒரு சூப்பர் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் கோஹ்லி. 39.3 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி, 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 126 (16 பவுண்டரி) விராத் கோஹ்லி 63 (6 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார். இவ்வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை தன்வசப்படுத்தியது இந்தியா. இவ்விரு அணிகள் மோதும் 4 வது போட்டி, வரும் 7 ம் தேதி பெங்களூருவில் நடக்க உள்ளது

பேஸ்புக் இமெயில் சேவை

சென்ற வாரம் பேஸ்புக் இணையதளம், தன் 50 கோடி நேயர்களுக்காக, இமெயில் சேவையினைத் தொடங்குவதாக அறிவித்தது, இணைய உலகில் பெரிய செய்தியாக வலம் வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் இது கிடைக்கும் என இதன் தலைமை நிர்வாகி ஸக்கர் பெர்க் அறிவித்துள்ளார். இதில் இமெயில் என்பது பேஸ்புக் மெசேஜஸ் (Facebook Messages) என்பதின் ஒரு பகுதியாகத் தான் இருக்கும். இந்த சிஸ்டத்தில் ..

dmdk wings

view click hare

தே.மு.தி.க., அழியாமல் இருக்க மக்கள் தான் காரணம்: விஜயகாந்த்

சென்னை : ""நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழிய மாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விட மாட்டேன்''என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள, ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழகம் சார்பில், சிறந்த சமூகசேவை புரிந்ததற்காக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் நடந்த விழாவில், ஐ.ஐ.சி.எம்., பல்கலைக் கழக நிர்வாகி ஜான் வில்லியம்ஸ், டாக்டர் பட்டத்தை விஜயகாந்திற்கு வழங்கினார். இதில் சென்னை ஏ.சி.ஐ.,- டையோசிஸ் தலைவர் ஜெயக்குமார், விஜயகாந்த் மனைவி பிரேமலதா, கேப்டன் "டிவி' நிர்வாக இயக்குனர் சுதீஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


இவ்விழாவில் ஏற்புரை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:நீங்களே சிறுபான்மையினர், எனச் சொல்லி உங்களை சிறுமைப் படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் பெருபான்மையினர், என நிரூபிப்பதற்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ளது.தி.மு.க., அரசு சிறுபான்மை மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என ஏசுநாதர் கூறினார். காரணம் எத்தனை தடவை அடித்தாலும், ஒரு நாள் கைவலிக்கும். அது போல் மக்கள் பொறுமையாகவுள்ளனர். அரசன் அன்று கொள்வான்;தெய்வம் நின்றுக்கொள்ளும்.நான் சிறுவயதிலேயே நன்மை செய்தவன்; தீமை செய்யவில்லை. கபடம் இல்லாதவன் பாக்கியசாலி என்று பைபிள் வசனம் கூறுகிறது. அதனால் நான் பாக்கியசாலி தான். இவ்வளவு பிரச்னைக்கு இடையில் எனக்கு, டாக்டர் பட்டம் கிடைத்துள்ளதற்கு தெய்வம் தான் துணை நிற்கிறது. இவ்வளவு நாட்கள் எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் இருப்பதற்காக சிலர் தடுத்தனர்.


திருச்சபையை மீறி இந்த டாக்டர் பட்டம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. எல்லா மதங்களும் அன்பு, பண்பு, கருணை ஆகியவற்றை போதிக்கிறது. கூடாரங்கள் வேறாக இருந்தாலும் இதயங்கள் ஒன்றாக இருக்க வேண்டும். இலவசத்தை மக்களுக்கு கொடுத்து சோம்பேறி ஆக்குகின்றனர்.ஆலமர விழுதுகளாக எனது தொண்டர்கள், பொது மக்கள் எனக்கு பலமாக உள்ளனர். நான்கரை ஆண்டுகளாக, தே.மு.தி.க., அழியாமல் இருப்பதற்கு மக்கள் தான் காரணம். மக்கள் இருக்கும் வரைக்கும். நான் அழியமாட்டேன். நான் இருக்கும் வரை மக்களை அழிக்க விடமாட்டேன். தமிழகத்தில் ஊழலை அறுத்து, தூர எறிந்துவிட்டு, நோய்வாய் பட்டிருக்கும் மக்களுக்கு நல்வாழ்க்கை கொடுப்பதற்காகவே, எனக்கு இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை, நான் கொடுப்பேன்; என்னால் அது முடியும். முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தம்; முடியும் என்பதே அறிவாளிகள் சொல்லும் வார்த்தை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.



இதைப் பற்றி

கருத்துக்கள் யாவும் வரவேற்கிறோம்......................

youtubedownloader free download

youtubedownloader free download