Friday, August 20

நண்பர்களே குழந்தைகள் இல்லாத வீடு கிடையாது என்பது போல கணினி இல்லாத வீடு கிடையாது என்பதும் நிரூபணம் ஆகி வருகிறது. அவ்வாறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்த குழந்தைகள் கணினியின் மவுசை அப்படி இப்படி ஆட்டி அனைத்தையும் கிளிக் செய்து ஒரே ரகளை செய்வார்கள் அப்பொழுதுதான் சிறிது நேரம் ஒரு பதிவு போடலாம் என்றால் தங்கமணி கூப்பிடுவார்கள். அந்த நேரத்தில் நம் குழந்தைகள் மவுசை வைத்து அனைத்தையும் ஒரு கோலம் செய்து விடுவார்கள். இது போல அவர்கள் செய்யாமல் இருக்க ஒரு சிறு மென்பொருள் மூலம் உங்கள் மவுஸை கிளிக் செய்வதை தடுக்கலாம். இதன் பெயர் Kids Key Lock இதை தரவிறக்க இங்கே செல்லுங்கள்
சுட்டி

No comments: