Friday, March 22

இலங்கை அரசுப் படைகளின் தாக்குதல்களின் பட்டியல்

தாக்குதல்/படுகொலைகள் நாள் இடம் இறப்புகள் குற்றவாளிகள் மூலம்
தமிழ் மாநாட்டுப் படுகொலைகள் (1974) சனவரி 10, 1974 யாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம் 9 காவல்துறை [1][2][3]

1980கள்

தாக்குதல்/படுகொலைகள் நாள் இடம் இறப்புகள் குற்றவாளிகள் மூலம்
சுன்னாகச் சந்தைப் படுகொலைகள் மார்ச் 28, 1984 சுன்னாகம், யாழ்ப்பாண மாவட்டம் 10 விமானப்படை [4][5][6]
ஒதியமலைப் படுகொலைகள் திசம்பர் 1, 1984 ஒதியமலை, முல்லைத்தீவு மாவட்டம் 29 - 32 இராணுவம் [7][8][9]
மன்னார் படுகொலைகள் (1984) டிசம்பர் 4, 1984 முருங்கன், மன்னார் மாவட்டம் 107 - 150 இராணுவம் [10][11][12][13][14]
வல்வெட்டித்துறைப் படுகொலைகள் (1985) மே 12, 1985 வல்வெட்டித்துறை, யாழ்ப்பாண மாவட்டம் 46 - 70 இராணுவம் [12][15][16][17]
குமுதினி படகுப் படுகொலைகள் மே 15, 1985 யாழ்ப்பாண மாவட்டம் கடல் பகுதி 23 கடற்படை [18][19]
தம்பட்டைப் படுகொலைகள் மே 17, 1985 தம்பட்டை, அம்பாறை மாவட்டம் 23 காவல்துறை (STF) [20]
கிளிவெட்டிப் படுகொலைகள் (1985) மே 30, 1985 கிளிவெட்டி, திருகோணமலை மாவட்டம் 44 காவல்துறை [21]
உடும்பன்குளம் படுகொலைகள் / அக்கரைப்பற்றுப் படுகொலைகள் பெப்ரவரி 19, 1986 அக்கரைப்பற்று, அம்பாறை மாவட்டம் 80 இராணுவம் [22][23][24][24][25]
இறால் பண்ணைப் படுகொலைகள் / கொக்கட்டிச்சோலை படுகொலைகள் (1987) சனவரி 27, 1987 கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு மாவட்டம் 83 காவல்துறை (சிறப்பு அதிரடிப் படை) [26][27][28][29][30]

1990கள்

தாக்குதல்/படுகொலைகள் நாள் இடம் இறப்புகள் குற்றவாளிகள் மூலம்
கல்முனைப் படுகொலைகள் சூன் 12, 1990 கல்முனை, அம்பாறை மாவட்டம் 160 - 250 இராணுவம் [31][32][33][34]
திராய்க்கேணி படுகொலைகள் ஆகத்து 6, 1990 திராய்க்கேணி, அம்பாறை மாவட்டம் 47 சிறப்பு இராணுவப் படை [35][36]
வீரமுனைப் படுகொலைகள், 1990 ஆகத்து 12, 1990 வீரமுனை, அம்பாறை மாவட்டம் 21 ஊர்காவல் படை [37]
கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலைகள் / வந்தாறுமூலை வளாகப் படுகொலைகள் செப்டம்பர் 5, 1990 வந்தாறுமூலை, மட்டக்களப்பு மாவட்டம் 158 இராணுவம் [38][39][20][40]
மட்டக்களப்புப் படுகொலைகள் (1990) / சத்துருக்கொண்டான் படுகொலைகள் செப்டம்பர் 9, 1990 மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம் 184 இராணுவம் [17][41][42][43][44][45][20]
சாவகச்சேரிச் சந்தைப் படுகொலைகள் அக்டோபர் 9, 1990 சாவகச்சேரி, யாழ்ப்பாண மாவட்டம் 12 இராணுவம் [37]
கொண்டைச்சிப் படுகொலைகள் பெப்ரவரி, 1991 கொண்டைச்சி, மன்னார் மாவட்டம் 4 இராணுவம் [37]
ஏறாவூர் படுகொலைகள் பெப்ரவரி 20, 1991 ஏறாவூர், மட்டக்களப்பு மாவட்டம் 6 ஊர்காவல்படை [37]
இருதயபுரம் படுகொலைகள் மார்ச், 1991 இருதயபுரம், மட்டக்களப்பு மாவட்டம் 11 காவல்துறை [37]
நாயன்மார் திடல் படுகொலைகள் ஏப்ரல் 12, 1991 நாயன்மார் திடல், தம்பலகாமம், திருகோணமலை மாவட்டம் 4
[46]
கொக்கட்டிச்சோலை படுகொலைகள் 1991 சூன் 12, 1991 கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு மாவட்டம் 152 இராணுவம் [38][20][20][27][47][48][49][50]
பொலன்னறுவை படுகொலைகள் ஏப்ரல் 29, 1992 முதுகல், கரப்பொல, பொலன்னறுவை மாவட்டம் 87 ஊர்காவல்படை, காவல்துறை [20][51][52]
மயிலந்தனை படுகொலைகள் ஆகத்து 9, 1992 மயிலந்தனை, மட்டக்களப்பு மாவட்டம் 35 இராணுவம் [20][53][54][55]
Paliyadvaddai massacre அக்டோபர் 24, 1992 Paliyadvaddai, மட்டக்களப்பு மாவட்டம் 10-11
[56]
யாழ்ப்பாண ஏரிப் படுகொலைகள் / கிளாலிப் படுகொலைகள் சனவரி 2, 1993 Jaffna Lagoon, யாழ்ப்பாண மாவட்டம் 35 - 100 கடற்படை [38][57][58][59][60]
வண்ணாத்தி ஆறு படுகொலைகள் பெப்ரவரி 17, 1993 வண்ணாத்தி ஆறு, மட்டக்களப்பு மாவட்டம் 16 இராணுவம் [20]
கல்வியங்காடு படுகொலைகள் சூலை 27, 1993 கல்வியங்காடு, யாழ்ப்பாண மாவட்டம் 6 விமானப்படை [61]
Jaffna lagoon massacre சூலை 29, 1993 Jaffna Lagoon, யாழ்ப்பாண மாவட்டம் 19 கடற்படை [61]
புல்மோட்டை படுகொலைகள் மே 6, 1995 புல்மோட்டை, திருகோணமலை மாவட்டம் 5 இராணுவம் [62]
நவாலி தேவாலயத் தாக்குதல் சூலை 9, 1995 நவாலி, யாழ்ப்பாண மாவட்டம் 125 விமானப்படை [63][64][65]
நாகர்கோயில் பாடசாலை குண்டுவீச்சு செப்டம்பர் 22, 1995 நாகர்கோயில், யாழ்ப்பாண மாவட்டம் 39 விமானப்படை [12][66][67]
குமாரபுரம் படுகொலைகள் / திருகோணமலை படுகொலைகள் (1996) / கிளிவெட்டி படுகொலைகள் (1996) பெப்ரவரி 11, 1996 குமாரபுரம், திருகோணமலை மாவட்டம் 24 இராணுவம் [48][68][69][70][71]
தம்பலகாமம் படுகொலைகள் பெப்ரவரி 3, 1998 தம்பலகாமம், திருகோணமலை மாவட்டம் 8 காவல்துறை, Home Guards [72][73][74][74]
புதுக்குடியிருப்பு குண்டுவீச்சு செப்டம்பர் 15, 1999 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் 21 விமானப்படை [75]

2000கள்

தாக்குதல்/படுகொலைகள் நாள் இடம் இறப்புகள் குற்றவாளிகள் மூலம்
பள்ளிக்குடா குண்டுவீச்சு மே 12, 2000 பள்ளிக்குடா, கிளிநொச்சி மாவட்டம் 5 விமானப்படை [76]
சிலிவத்துறை படுகொலைகள் மே 13, 2000 சிலிவத்துறை, மன்னார் மாவட்டம் 5 கடற்படை [76]
கொழும்புத்துறை படுகொலைகள் மே 15, 2000 கொழும்புத்துறை, யாழ்ப்பாண மாவட்டம் 5 இராணுவம் [76]
மிருசுவில் படுகொலைகள் திசம்பர் 20, 2000 மிருசுவில், யாழ்ப்பாண மாவட்டம் 8 இராணுவம் [77][77][78][79][80]
திருகோணமலை படுகொலைகள் (2006) சனவரி 2, 2006 திருகோணமலை, திருகோணமலை மாவட்டம் 5 காவல்துறை (STF) [81][82][82][83][84]
அல்லப்பிட்டி படுகொலைகள் மே 13, 2006 அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் 13 கடற்படை, EPDP [85][86][87]
பேசாலை தேவாலயத் தாக்குதல் சூன் 17, 2006 மேசாலை, மன்னார் மாவட்டம் 6 கடற்படை [88][89][90]
திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை / மூதூர் படுகொலைகள் ஆகத்து 4, 2006 மூதூர், திருகோணமலை மாவட்டம் 17 காவல்துறை, Home Guards [91][92]
புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல் ஆகத்து 13, 2006 அல்லைப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம் 15 - 36 இராணுவம் [93][94][95][96]
செஞ்சோலை குண்டுவீச்சு ஆகத்து 14, 2006 முல்லைத்தீவு, முல்லைத்தீவு மாவட்டம் 61 விமானப்படை [97][98][99][100]
வாகரைக் குண்டுவீச்சு நவம்பர் 7, 2006 கதிரவெளி, மட்டக்களப்பு மாவட்டம் 45 இராணுவம் [101]
தாண்டிக்குளம் படுகொலைகள் நவம்பர் 19, 2006 தாண்டிக்குளம், வவுனியா 5 காவல்துறை, இராணுவம் [102][103][104]
படகுத்துறை குண்டுவீச்சு / இலுப்பைக்கடவை குண்டுவீச்சு சனவரி 2, 2007 இலுப்பைக்கடவை, மன்னார் மாவட்டம் 15 விமானப்படை [105][106]
தர்மபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 8, 2009 தர்மபுரம், முல்லைத்தீவு மாவட்டம் 7 இராணுவம் [107]
வல்லிபுரம் மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 22, 2009 வல்லிபுரம், முல்லைத்தீவு மாவட்டம் 5 இராணுவம் [107]
சுதந்திரபுரம் எறிகணைத் தாக்குதல் சனவரி 24, 2009 சுதந்திரபுரம் சந்தி, முல்லைத்தீவு மாவட்டம் 11+ இராணுவம் [108]
உடையார்கட்டு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் சனவரி 26, 2009 உடையார்கட்டு, முல்லைத்தீவு மாவட்டம் 12 இராணுவம் [107]
புதுக்குடியிருப்பு மருத்துவமனை எறிகணைத் தாக்குதல் பெப்ரவரி 1-3, 2009 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் 9+ இராணுவம் [108][109][110][107]
பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை குண்டுவீச்சு பெப்ரவரி 5-6, 2009 புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மாவட்டம் Up to 75
[108][110][107]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு பெப்ரவரி 9-10, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 16+ இராணுவம் [108][111][107]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 9, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 22+ இராணுவம் [107][112]
புதுமத்தாளன் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 20, 2009 புதுமத்தாளன், முல்லைத்தீவு மாவட்டம் 13+ இராணுவம் [107]
வளையான்மடம் மருத்துவமனை குண்டுவீச்சு ஏப்ரல் 21, 2009 வளையார்மடம், முல்லைத்தீவு மாவட்டம் 4-5 விமானப்படை [107]
முள்ளிவாய்க்கால் சுகாதார நிலையக் குண்டுவீச்சு ஏப்ரல் 28, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 6+ இராணுவம், விமானப்படை [107]
முள்ளிவாய்க்கால் சுகாதாரநிலைய எறிகணை வீச்சு ஏப்ரல் 29, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 6 இராணுவம் [107]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 29, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 9+ இராணுவம் [107]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு ஏப்ரல் 30, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 9 இராணுவம் [107]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு மே 1, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 27 இராணுவம் [113]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை எறிகணை வீச்சு மே 2, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 68 இராணுவம் [107][114][115]
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை குண்டுவீச்சு மே 12, 2009 முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு மாவட்டம் 49 இராணுவம் [116][117][118]

Friday, January 11

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

வாழ்க்கை

பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

இராமகிருஷ்ணருடன்

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

மேலைநாடுகளில்

கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

இந்தியா திரும்புதல்

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.

மறைவு

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள்

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

விவேகானந்தரின் பொன்மொழிகள்

  • கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்[1].
  • உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா[2].
  • செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்[2].
  • வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்[2].
  • உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
  • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
  • எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
  • நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது. வீரர்களாகத் திகழுங்கள்!
  • இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
  • இளைஞர்களே உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால் என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
  • வலிமையே மகிழ்ச்சிகரமான நிரந்தரமான வளமான அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
  • சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்.
  • என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
  • நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்
    உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
  • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு

அவரது கவிதைகள்

கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாசு ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு.
எடுத்துக்காட்டாக..
அனைத்தும் ஆகி அன்பாகி
   அமைபவன் அவனே அவன்தாளில்
உனதுளம் ஆன்மா உடல் எல்லாம்
   உடனே தருக என் நண்பா

இவைகள் யாவும் உன்முன்னே
   இருக்கும் அவனின் வடிவங்கள்
இவைகளை விடுத்து வேறெங்கே
   இறைவனைத் தேடுகின்றாய் நீ

மனத்தில் வேற்றுமை இல்லாமல்
   மண்ணுல கதனில் இருக்கின்ற
அனைத்தையும் நேசித் திடும் ஒருவன்
ஆண்டவனை அவனைத் தொழுபவனாம்
                                   --விவேகானந்தர் 

நூல்கள்

விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

Tuesday, December 18

காமராஜ்

காமராஜ்


ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.












ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!

நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!

1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?

மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி

என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!

அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14

இன்னும் சொல்லவா?

159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை

கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம்,ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.

தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.

Thursday, November 29

# படித்ததில் பிடித்தது #

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் ! 


via @[100000415238493:2048:பிரபாகரன் சேரவஞ்சி]
‎# படித்ததில் பிடித்தது #

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருக
ில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள்