Sunday, January 22

பைல்களை நாம் காப்பி செய்வதனால் பெரும்பாலும் நாம் நீரோ சாப்ட்வேர் உபயோகிப்போம். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு நீரோ சாப்ட்வேர் செய்யும் செயல்களை செய்துவிடுகின்றது. 5 எம்.பிக்குள் இலவசமாக கிடைக்கும் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Data.,Multimedia.Disc images.Utilites என நான்கு பிரிவுகள் உள்ளது.தேவையான பிரிவில் தேவையானதை கிளிக் செய்யவும். நான் Data Dvd என்பதை கிளிக் செய்துள்ளேன். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிஸ்க்கில் உள்ள பைலை தேர்வு செய்யவும்.டிவிடியின் அளவினை தேர்வு செய்யவும். கீழே உள்ள Burn கிளிக் செய்யவும். தேவையான டிரைவ் தேர்வு செய்து ஓ.கே.தரவும்.
இதிலேயே நமக்கு Erase Disc என்கின்ற வசதியும் உள்ளது. தேவையான டிரைவ் தேர்வு செய்து டிவிடியை Erase செய்துவிடலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்
ஆற்றில் போட்டாலும் அளந்துபோடவேண்டும் என்று சொல்லுவார்கள்.நாம் ஆத்தில்(வீட்டில்)செய்யும் செலவினை சுலபமாக கணக்கிடலாம்..இந்த தளம் செல்ல http://www.home-budget-software.com"target="_blank"/ என்கின்ற முகவரியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Free Download கிளிக் செய்து வரும் சாப்ட்வேரினை
(3 எம்.பி.கொள்ளளவு) டவுண்லோடு செய்து பின்னர் இன்ஸ்டால் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு இடது புறம் கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். அதில் Expense,Income,Refund என மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும். நீங்கள் எந்த வகையான தகவல்களை உள்ளீடு செய்யப்போகின்றீர்களோ அந்த விவரம் தட்டச்சு செய்யவும்.
இதில் உள்ள Category யில் நமக்கு தேவையான கூடுதல் விவரங்களையும் இணைக்கலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் Name என்பதில் பெயரையும் Group-என்பதில் அதன் வகையையும் Color-என்பதனை தேர்வு செய்வதன் மூலம் சுலபமாக அறிந்துகொள்ளவும் முடியு.Save
என்பதன் மூலம் நாம் விவரங்களை சேமித்துக்கொள்ளலாம். இதில் கூடுதல் வசதி என்னவென்றால்இந்த சாப்ட்வேர் தமிழை ஆதரிப்பதால் இதில் நாம் தமிழிலேயே விவரங்களை தட்டச்சு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Overview கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய வரவு -செலவினை கிராப் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நண்பர் ஒருவர் எவ்வளவு வருமானம் வந்தாலும் என்ன செலவாகின்றது என்றே தெரியவில்லை -இருப்பே இருக்கமாட்டேன் என்கின்றது என்று சொன்னார். அவருக்கு இந்த சாப்ட்வேரினை கொடுத்து ஒருவாரத்திற்கு வரவு -செலவினை எழுதி வரசொன்னேன்.அவருக்கு வரும் வருமானத்தில் சுமார் 40 சதவீதம் பெட்ரோலுக்கே செலவாகிவந்தது தெரியவந்தது.அடுத்த வாரத்தில் அந்த செலவினை குறைந்துவிட்டார். இப்போது அவருக்கு குறிப்பிட்ட தொகை இருப்பு உள்ளது.இந்த சாப்ட்வேரினை டவுண்லோடு செய்து பாருங்கள்.உங்கள் வீணாண செலவுகளை குறைத்துவிடுங்கள்.